×

நா.முத்தையாபுரத்தில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு

திருச்செந்தூர், நவ.13: திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரத்தில் கட்டப்பட்ட புதிய பயணிகள் நிழற்குடையை அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திறந்து வைத்தார். திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.4.25 லட்சத்தில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இதை அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், திருச்செந்தூர் கோயில் முன்னாள் அறங்காவலர் தங்கத்துரை, பரமன்குறிச்சி ஊராட்சி செயலாளர் இளங்கோ, முன்னாள் கவுன்சிலர் ராஜமோகன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன், துணை அமைப்பாளர் ராவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதுபோல் கீழக்கல்லாம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.13.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளையும், ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேசன்கடை கட்டிடத்தையும் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்து திறந்து வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ரோஸ்லின், மீனாட்சி முன்னிலை வகித்தனர். மாநில திமுக மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், பள்ளி தலைமை ஆசிரியை குயின் பாலா, மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் மாரியப்பன், கதிரேசன், ரத்னம், பெருமாள், கர்ணன், ரேவதி, முத்து, வீரபெருமாள்ஆனந்த், வார்டு செயலாளர் ராஜேந்திரன், துரைராஜ், கணேசன், காளி உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Travelers ,Photo Gallery ,
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை