தூத்துக்குடி சிவந்தாகுளம் குடியிருப்பு பகுதியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்

தூத்துக்குடி, நவ. 13: தூத்துக்குடி சிவந்தாகுளத்தில் குடியிருப்பு பகுதியில் தங்களது எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையால் அவதிப்படும் மக்கள், இதை அகற்றுமாறு வலியுறுத்தி உள்ளனர்.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கிளைச்செயலாளர் ஆறுமுகம் தலைமையில், அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு விவரம்: தூத்துக்குடி  சிவந்தாகுளத்தில் மத்திய பகுதியான 1வது தெருவில் குடியிருப்புகள் நிறைந்த  இடத்தில் டாஸ்மாக் கடையை கடந்த இரு தினங்களுக்கு முன்னர், மக்களின் எதிர்ப்புகளை மீறி அதிகாரிகள் புதிதாகத் திறந்துள்ளனர். அதிக அளவில் குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும்.

இந்நிலையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள  மதுபானக்கடையால் மாணவ, மாணவிகள்,  பெண்கள், வணிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். மேலும் இந்த மதுபானக்கடை அருகே தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா  கும்பலால் இரட்டைக் கொலை  சம்பவமும் நடந்தது. இத்தகைய சூழலில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ெசயல்படும் இந்த  புதிய மதுபானக்கடையை  வேறு இடத்திற்கு துரிதமாக மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: