×

குடியிருப்புவாசிகள் பொது இடங்களில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தினால் அபராதம்

செய்யூர்: இடைக்கழிநாடு பேரூராட்சியில் உள்ள பொது இடங்களில் இயற்கை உபாதைகள் கழித்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்தினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியங்களில் உள்ள பொது இடங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.இதையொட்டி, பல்வேறு நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க கூடாது எனவும், மீறினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நடைமுறை  கடைபிடிக்கின்றனர்.

இந்நிலையில், செய்யூர் தாலுகா இடைக்கழிநாடு பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் இப்பகுதிகளில் கட்டி கொடுக்கப்பட்டுள்ள பொது கழிப்பறை மற்றும் சமுதாய கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம்  அறிவித்துள்ளது.
மேலும், தனிநபர் கழிப்பறை இல்லாத குடியிருப்புவாசிகள் இனிவரும் காலங்களில் பேரூராட்சியில் உள்ள பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க கூடாது.மீறி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம்  விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Tags : Residents ,places ,
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்