×

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உலக பக்கவாத தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் உலக பக்கவாத தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு, நரம்பியல் சிகிச்சை பிரிவு சார்பில் உலக பக்கவாத தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. டீன் பாலாஜி தலைமை வகித்தார். நரம்பியல் துறை  பேராசிரியர் பாலாஜி வரவேற்றார்.மருத்துவ கண்காணிப்பாளர் ஹரிகரன், நிலைய மருத்துவ அலுவலர் வள்ளியரசி, மருத்துவ கல்லூரி துணை முதல்வர் டாக்டர் அனிதா ஆகியோர் கலந்து கொண்டு மூளை பக்கவாதத்தை தடுப்பது குறித்து பேசினர். அப்போது, பக்கவாதம்  வராமல் தடுக்க, என்ன செய்ய வேண்டும். செய்ய கூடாது என்பதும், உடனே எப்படி மருத்துவ உதவிகள் எடுத்து கொள்வது என்பது குறித்தும் நரம்பியல் நிபுணர்கள் விளக்கவுரை ஆற்றினர்.

மேலும் அவர்கள் கூறுகையில், பக்கவாதம் வருவதை தடுக்க, ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். நார் சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். கோதுமை, கேழ்வரகு,  சோளம் போன்ற முழு தானிய உணவுகளை உண்ண வேண்டும்.குறிப்பாக, 40 வயதில் முழு ரத்த பரிசோதனை செய்து நம் உடலில் பாதிப்பு உள்ளதா என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு, அதற்கு தகுந்த சிகிச்சை பெற வேண்டும். பக்கவாதம் அறிகுறி தென்பட்டால் ஆரம்ப காலத்திலேயே உடனடியாக  மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றனர்.
நிகழ்ச்சியில், பக்கவாதம் ஏற்பட்டால், எப்படி தடுப்பது என்பது குறித்து விழிப்புணர்வு கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள், நோயாளிகள், டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Chengalpattu Government Hospital ,
× RELATED 4 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து...