×

உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள 4519 வாக்குச்சாவடிகளுக்கு, அலுவலர்கள் நியமனம் செய்வது தொடர்பான கூட்டம் கலெக்டர் பொன்னையா  தலைமையில் நடந்தது.இதில் அனைத்து துறை அலுவலர்களுக்கு இணையதள பதிவுகள் மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டது. அதில், நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் விவரங்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின்  https://www.tnsec.tn.nic.in/eroll என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.அலுவலர்கள்-பணியாளர்கள் ஒருவரும் விடுபடாமல் இணையதளத்தில் பதிவேற்றம்  செய்ய வேண்டும். கருவூலம் மூலம் ஊதியம் பெறும் அலுவலர்கள்,  பணியாளர்கள் மட்டுமின்றி, தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களின் விவரங்ளையும் விடுபாடின்றி உரிய படிவத்தில் பூர்த்தி செய்து மேற்படி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

படிவத்தில் உள்ள அனைத்து விவரங்களும் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் தொடர்பான இணையதள பதிவுகள் அனைத்தும் வரும் 15ம் தேதிக்குள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால்  வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், உரிய நேரத்தில் இப்பணியினை முடிக்க வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சப் கலெக்டர் சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள்  (தேர்தல்) கிருஷ்ணமூர்த்தி, (வளர்ச்சி) ஆனந்தன். தேசிய தகவல் மைய அலுவலர் ரமேஷ், கூடுதல் தேசிய தகவல்  மைய அலுவலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி...