பஸ்சில் நகை, பணம் திருடிய தூத்துக்குடி பெண்கள் 3 பேர் பிடிபட்டனர்

சென்னை: சென்னையில் பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணம், நகைகளை கொள்ளையடித்து வந்த 3 பெண்கள் சென்னைக்கு தப்பிச்சென்றுள்ளதாக சென்னை போலீசாருக்கு தூத்துக்குடி போலீசார் தகவல் கொடுத்தனர்.இதையடுத்து கே.ேக.நகர் போலீசார் விரைந்து செயல்பட்டு பேருந்து நிறுத்தம் உள்பட மக்கள் கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். உதயம் திரையரங்கம் அருகே சந்தேகப்படும்படி நின்ற 3 பெண்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் பதற்றத்துடன் முன்னுக்கு பின் முரணாக பேசினர். போலீசார் தீவிரமாக நடத்திய விசாரணையில், தூத்துக்குடி பகுதியில் பஸ்சில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த தூத்துக்குடியை சேர்ந்த காளியம்மாள் (42), தேவி (40), இசக்கியம்மாள் (41) என்று தெரியவந்தது.அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். சென்னையில் பேருந்துகளில் கைவரிசை காட்டியுள்ளார்களா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: