காதலியுடன் நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட மணமகனின் அந்தரங்க வீடியோவை பார்த்து திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண்: வரவேற்பு நிகழ்ச்சியில் ருசிகர சம்பவம்

சென்னை: திண்டுக்கல்லை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சென்னை போரூரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இருவீட்டு சம்மதத்துடன் நிச்சயம் செய்யப்பட்டது. கடந்த 10ம் ேததி கே.ேக.நகரில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கு முதல் நாள் 9ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்து கொண்டிருந்தது. அப்போது, மணமகள், வருங்கால கணவருடன் செல்பி எடுக்க தனது செல்போனை எடுத்தார். அப்போது, வாட்ஸ்அப்பில் 30க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வந்திருந்தது. அதில், வருங்கால கணவர் இளம்பெண் ஒருவருடன் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வந்து குவிந்து இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மணமகள், உடனே மணமகனிடம் அதை காட்டி என்ன இது என்று கேட்டுள்ளார். அதற்கு மணமகன், பதில் அளிக்க முடியாமல் மவுனமாக இருந்தார். உடனே மணமகள் தனது பெற்றோரிடம் சம்பவத்தை கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். திருமணத்திற்கு வந்திருந்த மணமகன் வீட்டார் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.

திருமணம் பாதியில் நின்றதால் மணமகள் வீட்டார் நாங்கள் செய்த செலவுகளை உடனே தரவேண்டும் என்று கூறி மணமகன் பெற்றோரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த எம்ஜிஆர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரு வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பெண் வீட்டார் எங்களுக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம். திருமணத்திற்கு நாங்கள் செய்த செலவு தொகையை பெற்று தர வேண்டும் என்று கூறினர். அதன்படி, மணமகன் வீட்டார் பணத்தை கொடுத்தனர். பிறகு மணமகள் வீட்டார் திண்டுக்கல்லுக்கு சென்றுவிட்டனர்.இதற்கிடையே மணமகனின் தந்தை திருமணத்தின் போது மணமகள் செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் புகைப்படம் மற்றும் வீடியோ அனுப்பி திருமணத்தை நிறுத்திய இளம்பெண் மீது எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: மணமகன் அவரது வீட்டின் அருகில் உள்ள இளம்பெண் ஒருவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனால் இருவரும் பல இடங்களுக்கு சென்று ஒன்றாக புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும், இருவரும் நெருக்கமாகவும் வீடியோ எடுத்துள்ளனர்.  வசதி குறைவான பெண் என்பதால் மணமகன் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  அதையும் மீறி பல முறை காதலியுடன் சுற்றி வந்துள்ளார். மகனின் செயல் எல்லை மீறி சென்றதால், அவசர அவசரமாக அவரது பெற்றோர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். நாங்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நாங்கள் உயிரோடு இருக்கமாட்டோம் என்று மிரட்டியுள்ளனர்.

 இதனால் அச்சமடைந்த மணமகன், வேறு வழியின்றி பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். ஒரு கட்டத்தில் மணமகனால் ஏமாற்றப்பட்ட காதலி தனது நண்பர்கள் உதவியுடன் மணமகளின் செல்போனை எண்ணை வாங்கி கொடுத்துள்ளார். அதன்படி மணமகனின் காதலி தனது காதலனிடம் நெருக்கமாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சரியான நேரத்தில் செயல்பட்டு வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் மணமகளுடன் ஒன்றாக நிற்கும் போது, வாட்ஸ் அப் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அனுப்பி திருமணத்தை நிறுத்தியது தெரியவந்தது.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.காதலன் திருமணத்தை தனது நண்பர்கள் உதவியுடன் இளம்பெண் சரியான நேரத்தில் தடுத்து நிறுத்திய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: