விண்ணப்பிக்க 25ம் தேதி கடைசி நாள் மாணவர்களுக்கான திறன் போட்டி: கலெக்டர் தகவல்

சென்னை: மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்ட அறிவிப்பு:வருகிற 2021 செப்டம்பர் மாதம் சர்வதேச திறன் போட்டி சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் https://worldsskillsindia.co.in./worldskill/world/ என்ற இணையதளம் மூலமாக வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

6 துறைகளில் உள்ள 47 தொழிற்பிரிவுகளில் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக போட்டி நடைபெற உள்ளது. 1.1.99 அன்றும், அதன் பிறகும் பிறந்த மாணவ மாணவிகள், இளைஞர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்க தகுதியுடையவர்கள். 5ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வித்தகுதி பெற்றவர்கள், பட்டயப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் மற்றும் படித்து கொண்டிருப்பவர்கள், தொழிற்பயிற்சி நிலையில் (ஐடிஐ) படித்தவர்கள், தற்போது படித்து கொண்டிருப்பவர்கள், தொழிற்சாலையில் பணியில் உள்ளவர்கள், குறுகிய கால தொழிற் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.இதுதொடர்பான விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குனர், மாவட்ட திறன் வளர்ச்சி பயிற்சி அலுவலகம், சென்னை மாவட்டம் (வடசென்னை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம்), ெசன்னை -21 என்கிற முகவரியில் அணுகலாம். 044-25201163 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: