×

சிவகாசி தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் மின்சாரம்

சிவகாசி, நவ. 12: சிவகாசி தாலுகா அலுவலகத்தில், அதிகாரிகளின் அலட்சியத்தால், மின்சாரம் வீணாகும அவலம் ஏற்பட்டுள்ளது. மின் சிக்கனத்தை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. இதில், பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய, அரசு அதிகாரிகளின் அலட்சியமாக செயல்படுகின்றனர். சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் மின்சாரம் வீணாகிறது. வேலை நாட்களாக இருந்த போதிலும் தாலுகா அலுவலகத்தின் உள்ளே துணை வட்டாட்சியர்கள் பகுதி உட்பட 9 பகுதிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியாளர்கள் இல்லாத போதிலும் மின்விளக்குகள் வீணாக எரிகின்றன.

மின்விசிறிகள் வீணாக இயங்குகின்றன. அதிகாரிகள் இல்லாத நிலையில், மின்விசிறி ஓடிக் கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் முகம் சுழித்தவாறு சென்றனர். மின்சிக்கனமாக காக்க வேண்டிய அரசு அலுவலகத்தில், பகல் முழுவதும் மின்சாரத்தை வீணடித்து வருவது, சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மின் சிக்கனத்தை பொதுமக்கள் மட்டுமல்லாமல், அரசு அதிகாரிகள் மட்டத்திலும் எடுத்துரைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : office ,taluk ,Sivakasi ,
× RELATED ஈரோட்டில் இன்று மின் நிறுத்தம்