×

மயிலாடும்பாறை அருகே வவ்வால் தொல்லையால் விவசாயிகள் கவலை

வருசநாடு, நவ.12: வருசநாடு அடுத்த மயிலாடும்பாறை அருகே வவ்வால் தொல்லையால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மயிலாடும்பாறை அருகே கோவிலாங்குளம், சிங்கராஜபுரம், வருசநாடு, தும்மக்குண்டு,  வாலிப்பாறை, சீலமுத்தையாபுரம் போன்ற பகுதிகளில் வவ்வால் தொல்லை இரவு நேரத்தில் அதிகரித்துள்ளது. இதனால் இலவம்பஞ்சு விவசாயிகள், வியாபாரிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஏராளமான நிலப்பரப்பில் இலவமரம் வளர்க்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த சில தினங்களாக வவ்வால் அதிகரிப்பு காரணமாக இலவம்பஞ்சு, பீன்ஸ் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளார்.

இது குறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் வவ்வாலின் ஆதிக்கம் அதிகரித்துவிடும். குறிப்பாக வைகை அணையிலிருந்து வருசநாடு பகுதி வரை இதுபோன்ற வவ்வால் தொல்லை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மரங்களிலும் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தங்கியுள்ளதோடு, விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. இதற்கு இழப்பீடு வழங்க தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
தெரிவித்துள்ளனர்.

Tags : Vavwal ,Mayiladuthurai ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...