×

மக்காச்சோளத்தில் நோய் தடுப்பு முறைகள்

போடி, நவ. 12: போடி அருகே மக்காச்சோளத்தில் நோய் தடுப்பு முறைகள் குறித்து வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஆய்வு செய்தனர். உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் கீர்த்தனா, சௌந்தர்யா, தனஸ்ரீ, மம்தா, வினோதினி ஆகிய மாணவிகள், போடி வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் அமலா வழிகாட்டுதலின்பேரில் போடி பகுதியில் தங்கி கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளை சந்தித்து வருகின்றனர். இந்த மாணவிகள் போடி விசுவாசபுரம் கிராமத்தில் மக்காச்சோளத்தில் நோய் தடுப்பு முறைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

போடி வேளாண்மை துறையை சேர்ந்த உதவி வேளாண்மை அலுவலர்கள் உதவியுடன் விவசாயிகளுக்கு மக்காச்சோளத்தில் நோய் தடுப்பு முறைகள் குறித்தும், அமெரிக்கன் படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் விளக்கி, செயல்முறையும் செய்து காண்பித்தனர்.விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கினர். விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களிடமும் விவசாயம் குறித்து கேட்டறிந்தனர். மாணவிகளுக்கு போடி வேளாண்மை துறை அதிகாரிகள் பல்வேறு சந்தேகங்ளுக்கு விளக்கமளித்தனர்.

Tags :
× RELATED களைகட்டிய தற்காலிக பூத்கள்