×

வேளாண்மை துறை சார்பாக தோளூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

பரமக்குடி, நவ.12:  பரமக்குடி வேளாண்மைத் துறை சார்பாக தோளூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிர் திட்ட அடிப்படையிலான பயிற்சி வழங்கப்பட்டது. பரமக்குடி வட்டார வேளாண்மைத் துறை சார்பாக தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயிர் திட்ட அடிப்படையிலான பயிற்சி தோளூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி தலைவர் ராகவன் கலந்து கொண்டு நெல்லுக்கு தேவையான தொழில் நுட்ப உத்திகளை விளக்கினார். மேலும் வறட்சியை தாங்கி வளரக்கூடிய அண்ண 4 நெல் ரகத்தை பற்றியும், தண்ணீர் பற்றாக்குறையை போக்க பிபிஎப்எம் பயிர் காக்கும் பாக்டீரியாவை 200மில்லி ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தினால் விவசாயிகள் நல்ல மகசூலை பெறமுடியும் என்றார்.

வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன், உயிர் உரங்களின் பயன்,பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை காக்கும் முறைகள் குறித்து பேசினார். வேளாண்மை அலுவலர் அபிநயா, துணை வேளாண்மை அலுவலர் சுருளிவேலு ஆகியோர் விவசாயிகளின் வயல்களுக்கு சென்று நெல் தொழில்நுட்பங்களை செய்முறை விளக்கங்களோடு எடுத்துரைத்தனர். இதில் தோளூர் மற்றும் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : village ,Agriculture Department ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...