120 அடி கிணற்றில் விழுந்த பெண் உயிருடன் மீட்பு : உசிலம்பட்டியில் பரபரப்பு

உசிலம்பட்டி, நவ. 12: உசிலம்பட்டியில் 120 அடி கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற சென்ற பெண் தவறி கிணற்றில் விழுந்தார். தீயணைப்புத்துறையினர் போராடி பெண்ணையும், ஆட்டுக்குட்டியையும் உயிருடன் மீட்டனர். மதுரை உசிலம்பட்டி தாலுகா, செல்லம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது நல்லபெருமாள்பட்டி. இந்த ஊரைச்சேர்ந்த ராமசாமி மகள் தமிழரசி(27). இவர் நேற்று ஆடு மேய்த்துக்கொண்டிருக்கு ம்போது ஆட்டுக்குட்டி அருகிலுள்ள 120 அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்தது. அதை மீட்ட முயற்சித்த தமிழரசியும் கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்.

கிணற்றின் அடியில் தண்ணீர் இல்லாத மணல் உள்ள பகுதியில் விழுந்ததால் சிறிய காயத்துடன் அவர் தப்பித்தார். கிணற்றுக்குள் இருந்தவரை அருகிலுள்ளவர்கள் உசிலம்பட்டி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்மபவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் சுப்புராஜ் தலைமையிலான தீயணைப்புக்குழுவினர் (ரோப்) கயிற்றின் மூலமாக தமிழரசியும், ஆட்டுக்குட்டியும், உயிருடன் மீட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories:

>