மேலூர் பாசன கால்வாயில் 2 நாட்களாக இறந்து கிடக்கும் பசுமாடு

மேலூர், நவ. 12: பாசனக் கால்வாயில் விழுந்து அடித்து வரப்பட்ட பசுமாட்டின் உடலை அகற்றாததால், அது ஒரே இடத்தில் தண்ணீரில் சுழன்றபடி உள்ளது. பெரியாறு பாசனக் கால்வாயில் விழுந்த பசு மாடு ஒன்று இறந்து போனது. இது பெரிய கால்வாயில் இருந்து மடை வழியாக சிறிய கால்வாயில் அடித்து வந்தது. இப்படி வந்த மாட்டின் உடல் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் அருகில் உள்ள மதகில் சிக்கியது. தண்ணீர் வேகமாக அந்த இடத்தில் விழுவதால் இறந்த அந்த பசுவின் உடல் மேலும் கீழுமாக சென்று வருகிறது. இதைக் கண்ட பள்ளி மாணவிகள் மிகுந்த அச்சமடைந்தனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. 2 நாட்களுக்கு மேலாவதால், எந்த நேரத்தில் இந்த உடல் சிதறி தண்ணீரில் கலக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் விரைந்து இறந்த அந்த பசுவின் உடலை அகற்றுவார்களா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories:

>