திருப்பரங்குன்றம் அருகே ெதாடரும் அவலம் பாதையில்லாததால் முட்புதர், வயல் வழியே பள்ளி ெசல்லும் மாணவர்கள்

திருப்பரங்குன்றம், நவ.12: மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ளது பெரிய ஆலங்குளம். இங்கு அரசு உயரநிலைப்பள்ளி உள்ளது. பத்தாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளி கடந்த ஆண்டு வரை தொடர்ந்து பத்தாம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளியில் பெரிய ஆலங்குளம், வலையப்பட்டி, பரம்புபட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். புதிய பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு நீண்ட நாட்கள் திறக்கப்படாமல் இருந்தது. தினகரன் செய்தி எதிரொலியால், பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிக்கு மாணவர்கள் சென்று வர நிரந்தரமான பாதை அளவிடப்பட்டு  பல மாதங்களாகியும் பாதை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் மாணவர்கள் விவசாய நிலங்களின் வழியாக சென்று வருகின்றனர். தற்போது  விவசாய நிலங்களின் வழியே மாணவர்கள் சென்று வருவதால் சுமார் 2 கி.மீ தூரம்  நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் மாணவர்கள் சோர்வடைந்து விடுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும் சில இடங்களில் முட்புதர்களை கடந்ததும், தண்ணீர் நிரம்பிய வாய்க்கால்கள் வழியாகவும் செல்ல வேண்டியுள்ளதாகவும்,  தற்போது மழைக்காலம் என்பதால் பாதைகள் சேறும் ,சகதியுமாக உள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி ஆணையாளரிடம் பல முறை புகார் கொடுத்தும் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பெரிய ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்த மருதுபாண்டியன் கூறுகையில்,`` பள்ளி துவக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில் பள்ளிக்கூடம் சென்றுவர நிரந்தரமான பாதை வசதியில்லை. பள்ளிக்கு பாதை ஒதுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், இன்று வரை நிரந்தரமான பாதைக்கு எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.  இதனால் விவசாய நிலம் வழியாகவே மாணவர்கள மிகுந்த சிரமப்பட்டு பள்ளி சென்று  வருகின்றனர். இந்த பள்ளியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் திருப்பரங்குன்றம் ஆலங்குளம் சாலை உள்ளது. அந்த இடத்திற்கு பாதை வசதி ஏற்படுத்த அரசுக்கு சொந்தமான நிலமும் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே,  மாணவர்களுக்கு பள்ளி சென்றுவரும் வகையில் நிரந்தரப் பாதை வசதி ஏற்படுத்தி தர மதுரை மாவட்ட கலெக்டர் வினய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories:

>