லமுறை மனு அளித்தும் ஒருமுறையும் பலனில்லை

பதிண்டுக்கல், நவ. 12: திண்டுக்கல் அடுத்த சீலப்பாடி கிராமம், வஞ்சிஓடைபட்டியை சேர்ந்த பழனிவேல் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமியிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், ‘எனக்கு அரசு மூலம் 36 வருடங்களுக்கு முன்பு வஞ்சிஓடைப்பட்டியில் 1983ம் ஆண்டு “கிராமங்களில் வீட்டு மனைகள் ஒப்படைப்பு திட்டத்தின்” மூலம் சர்வே எண் 25/2ல் நத்தம் சர்வே எணில் இடம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை பட்டாவை சீலப்பாடி கிராம கணக்கில் பதிவு செய்யப்படவில்லை. பட்டாவை பதிவு செய்து தரக்கோரி பலமுறை வருவாய்த்துறையில் மனு கொடுத்தேன். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டாவை பதிவு செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து பழனிவேல் கூறுகையில், ‘பட்டாவை பதிவு செய்து தர கோரி இதுவரை கலெக்டரிடம் 4 மனுவும், முகாமில் 1 மனுவும், ஜமாபந்தியில் 1 மனுவும், தாசில்தாரிடம் 1 மனுவும் கொடுத்துள்ளேன். இதுமட்டுமின்றி வனத்துறை அமைச்சர் சீனிவாசனிடமும் கையெழுத்து வாங்கி கொடுத்தேன். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 36 வருடங்களாக அலைந்து கொண்டே தான் இருக்கிறேன். எப்போதுதான் எனக்கு விடிவுகாலம் கிடைக்குமோ’ என்றார்.

Related Stories: