×

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊழியர், மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் தொடக்கம்

மார்த்தாண்டம்,நவ.12 :  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊழியர் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நேற்று களியக்காவிளையில் இருந்து தொடங்கியது. இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும், அரசு துறையில் அவுட் சோர்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்–்மை திட்டத்தை கைவிட  வேண்டும், தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள நான்கரை லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பு ஊதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, ஓசூர்,நீலகிரி,வேதாரண்யம் ஆகிய 5 இடங்களில் இருந்து நவம்பர் 11ம் தேதி தொடங்கி 15ம்தேதி வரை தமிழகம் தழுவிய பிரசார பயணம் நடைபெறுகிறது. ேமலும் 18ம் தேதி கோட்டை நோக்கி பேரணியும் நடைபெறுகிறது.

குமரி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் களியக்காவிளையில் இருந்து பிரசார பயண இயக்கம் நேற்று தொடங்கியது. மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் விஜயகுமார் வரவேற்றார். முன்னாள் எம்பி பெல்லார்மின் பிரசார பயணத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில ெபாது செயலாளர் செல்வம், மாநில துணை தலைவர் மங்கள பாண்டியன், மாநில செயலாளர் கிறிஸ்டோபர் ஆகியோர் பிரசார பயணம் குறித்து விளக்கி பேசினர்.இதில் விளவங்கோடு வட்ட செயலாளர் பிரான்ஸ்சிஸ் சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பிரசார பயணம் விளவங்கோடு தாலுகா அலுவலகம், குழித்துறை நகராட்சி, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கருங்கல் பேரூராட்சி, தக்கலை தாலுகா அலுவலகம், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், கலெக்டர் அலுவலகம் வழியாக வடசேரியில் நிறைவடைந்தது. இன்று பிரசார இயக்கம் ஆரல்வாய்மொழியில்  தொடங்கி 15ம்தேதி திண்டுக்கல்லில் நிறைவடைகிறது.

Tags : Tamilnadu Government Employees Union ,
× RELATED கிருஷ்ணகிரி, ஓசூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்