×

பெரணமல்லூர் ஒன்றியத்தில் நெல் பயிருக்கு காப்பீடு தொகை செலுத்த விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்

பெரணமல்லூர், நவ.12:  பெரணமல்லூர் ஒன்றியத்தில் நெல் பயிருக்கு காப்பீடு தொகை செலுத்த விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகத்தை வேளாண் உதவி இயக்குனர் தொடங்கி வைத்தார்.பெரணமல்லூர் ஒன்றியத்தில் நெல் பயிருக்கு காப்பீடு தொகை செலுத்தி பயன் அடையுமாறு வேளாண் உதவி இயக்குநர் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து, வேளாண் உதவி இயக்குனர்(பொறுப்பு) சுந்தரம் நெடுங்குணம் பகுதியில் நேற்று நோட்டீஸ் விநியோகம் செய்து  கூறியதாவது:
விவசாயிகள் தற்போது இரண்டாம் பருவ சம்பா சாகுபட்டியில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால்  அதற்காக காப்பீடு திட்டத்தில் சேர வேண்டும். இந்த திட்டத்தின்படி விவசாயிகளுக்கு பயிர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால்  உரிய காப்பீடு வழங்கப்படும்.

குறிப்பாக பருவ கால இடைவெளிகள் வெள்ளம், வறட்சி மற்றும் விதைகள் முளைக்காத நிலை, விதைக்கவே முடியாத சூழல், அறுவடைக்கு பின் இயற்கை இடர்ப்பாடுகள் ஏற்பட்டால் மகசூல் அடிப்படையில் நான்கு வழிகளில் காப்பீடு தொகையை பெற்றுக்கொள்ளலாம். முக்கியமாக  நெல் பயிர் ஏக்கருக்கு ₹416 காப்பீடு தொகை செலுத்த வேண்டும். இந்த தொகையை செலுத்த வருகிற 15ம் தேதி கடைசி நாளாகும். எனவே விவசாயிகள் காப்பீடு தொகையினை செலுத்தி பயன்பெற வேண்டும் என்றார். இதில் பெரணமல்லூர் வேளாண் அலுவலர் கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : paddy farmers ,
× RELATED பொதுமக்கள் கோரிக்கை மயிலாடுதுறையில்...