×

போளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 7 கிராமங்களில் டெங்கு கொசு புழு ஒழிப்பு பணி

போளூர், நவ.12:  பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் போளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட போளூர், களம்பூர், மாம்பட்டு, கல்வாசல், ஏரிக்குப்பம், இரும்புலி, கேசவபுரம் உட்பட 7 கிராமங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு, கொசுபுழு ஒழிப்புபணி நடைப்பெற்றது. பின்னர், மாம்பட்டு கிராமத்தில் வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.சுந்தர் தலைமையிலான குழுவினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, காய்ச்சல் இருந்தால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நோய்கள் பாதிப்புகள் உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், கிராமம் முழுவதும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு கொசுபுழு அழிக்க மருந்து அடிக்கப்பட்டது. மேலும், அங்குள்ள மேல்நிலை தேக்கத் தொட்டியை சுத்தம் செய்து மருந்து தெளித்து சுத்திகரித்தப் பின்னர் குடிநீரை வழங்கும்படி டேங்க் ஆபரேட்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.இதில் வட்டார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பொதுமக்கள், பள்ளி  மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

Tags : villages ,Polur Union ,
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு