×

மாவட்ட அளவிலான திறன் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை, நவ.12: திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் வரும் 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச திறன் போட்டியில் பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க https:worldskillsindia.co.in/worldskill/world/ என்ற இணையதளத்தில் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க அழைக்கப்படுகின்றனர்.   6 துறைகளில் உள்ள 47 தொழிற்பிரிவுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக  நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 25ம் தேதியாகும். வயது வரம்பு: 01.01.1999 அன்றும் அதற்கு பிறகும் பிறந்தவர்கள் தகுதியுடையவர்களாவர்.5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வித் தகுதி பெற்றவர்கள், பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் மற்றும் படித்து கொண்டிருப்பவர்கள், தொழிற் பயிற்சி நிலையம் தொழிற் நுட்ப கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் படித்து கொண்டிருப்பவர்கள், உட்பட அனைவரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும் விவரங்களுக்கு 04175-298297, 9499055871 என்ற  எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags :
× RELATED திருவண்ணாமலையில் உலக எய்ட்ஸ் தின...