×

திருவண்ணாமலையில் பனி அதிகரித்துள்ளதால் மல்லிகை பூ தோட்டத்தில் நோய் தாக்கம்

திருவண்ணாமலை, நவ.12:  திருவண்ணாமலையில் பனி மூட்டம் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் பயிரிட்டுள்ள மல்லிகை பூ தோட்டத்தில் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதை, வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் நெல், கரும்பு, மணிலா சாகுபடி செய்வது போன்று, மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பல வகையான பூ செடிகளும் பயிரிட்டு வருகின்றனர். நாள்தோறும் வருவாய் பெறக்கூடிய பயிரான பூ தோட்டம் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பருவ நிலை மாற்றத்தின் காரணமக திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக  பனி மூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் நெல் பயிர்களுக்கு மட்டுமின்றி, பூ தோட்டங்களிலும் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் தெரிவித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை அருகே விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டுள்ள மல்லிகை பூ தோட்டத்தில் நோய் தாக்குதல் ஏற்படுள்ளதாக விவசாயிகள் தெரிவித்ததை தொடர்ந்து, வேளாண் அலுவலர்கள் மற்றும் ஓசூர் தனியார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் நேற்று திருவண்ணாமலை அடுத்த கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள விசாய நிலத்திற்கு சென்று மல்லிகை பூ தோட்டத்தில் ஏற்பட்டள்ள நோய் தாக்குதலை ஆய்வு செய்தனர். அதைத்ெதாடர்ந்து, விவசாயிகளிடம் தற்போது பனி காலம் என்பதால், மல்லிகை செடியில் ஏற்படும் ேநாய் பாதிப்புகள் குறித்தும், முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாசாயிகளுக்கு தெரிவித்தனர். மேலும், தற்போது நிலவும் பருவநிலை மாற்றத்தினால் நோய் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மிகுந்த கவனத்துடன் பயிர்களை கண்காணிக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினர்.

Tags :
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...