×

கீழ்பென்னாத்தூரில் இயற்கை முறை விவசாயம் குறித்து செயல் விளக்கம்

கீழ்பென்னாத்தூர், நவ.12: கீழ்பென்னாத்தூரில் தோட்டக்கலை தனியார் கல்லூரி சார்பில் இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்து செயல்விளக்கம் நேற்று நடைபெற்றது. கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை அலுவலகம் முன்  தனியார் கல்லூரி சார்பில், அரசு தோட்டக்கலை அலுவலர் திவ்யா தலைமையில் விவசாயிகளுக்கு இயற்கை முறையில் பயிரிடுவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் கீழ்பென்னாத்தூர் பகுதியில் 75 நாட்களாக இயற்கை விவசாயம் செய்வது குறித்து விவசாயிகளுடன் சேர்ந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். பின்னர், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கண்காட்சியில் முட்டை அமிலம், பசுமை குடில், நடவு முறையில் பயிரிடுதல், பூச்சிக்கொல்லி இயந்திரம், அமில கரைசல், வாழை பயிரிடுதல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தமிழகத்தில் தரமற்ற பொறியியல்...