×

அரசு பள்ளிக்கு ₹15 லட்சத்தில் கலையரங்கம்

கலசபாக்கம், நவ.12:  கலசபாக்கம் அருகே மேலாரணி அரசு பள்ளிக்கு ₹15 லட்சத்தில் கலையரங்கம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜையில் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கலந்து ெகாண்டார்.கலசபாக்கம் அடுத்த மேலாரணி அரசு பள்ளியில் விழாக்கள் நடத்துவதற்கு கலைஅரங்கம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏ வி.பன்னீர் செல்வம் வாக்கு சேகரிக்க வந்தபோது பள்ளிக்கு கலையரங்கம் கட்டி தரவேண்டும் என இப்பகுதிமக்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு எம்எல்ஏ ஆனவுடன் கோரிக்கையை நிறைவேற்றுவதாக எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் உறுதியளித்தார்.  அதன்படி, மேலாரணி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கலையரங்கம் கட்ட ₹15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், பள்ளியில் கலையரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில், எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இதில், பள்ளி தலைமை ஆசிரியை பரிமளா, போளூர் வீட்டு வசதி கடன் சங்க துணைத்தலைவர் பொய்யாமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சாணிப்பூண்டி கிராமத்தில் கோமாரி நோய்...