×

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நிலவேம்பு குடிநீர் விழிப்புணர்வு முகாம்

வேலூர், நவ.12: வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நிலவேம்பு குடிநீர் பற்றிய விழிப்புணர்வு முகாம் நேற்று வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் செல்வசுந்தரி தலைமை தாங்கினார். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் கூடுதல் சார்பு நீதிபதி ஆனந்தன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் சத்துவாச்சாரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கல்யாணி நிலவேம்பு குடிநீரின் மகத்துவம் குறித்து விளக்கினார். பார் அசோசியேஷன் தலைவர் உலகநாதன், செயலாளர் செல்வராஜூ, அட்வகேட் அசோசியேஷன் தலைவர் தினகரன், மகளிர் வழக்கறிஞர் சங்க தலைவர் காஞ்சனா ஆகியோர் பேசினர். தொடர்ந்து ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வழக்கறிஞர்கள்  ஆகியோருக்கு மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் சத்தீஷ்ராஜ் செய்திருந்தார்.

Tags :
× RELATED வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்...