கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அம்பை அகஸ்தீஸ்வரர் கோயிலில் பாலாலயம்

அம்பை, நவ. 12: அம்பா சமுத்திரம் அகஸ்தீஸ்வரர் கோயிலில் 2 நாட்கள் விமான பாலாலயம் விழா நடந்தது. அம்பாசமுத்திரம் பிரதான சாலை அருகே அமைந்துள்ள உலோபாமுத்திரை அம்பாள் சமேத அகஸ்தீஸ்வரர் கோயிலில் கடந்த 1995ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. வரும் 2020ம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை முதல் இருநாட்கள் சிறப்பு விமான பாலாலய பூஜைகள் நடந்தது.இதையொட்டி நவ. 10ம் தேதி காலை 6 மணி முதல் விக்னேஷ்வர பூஜை, தேவதா அனுக்ஞை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து மஹா கணபதிக்கு சிறப்பு ஹோமத்துடன் அபிஷேக தீபாராதனை நடந்தது. 9 மணிக்கு உலோபா முத்திரை உடனுறை அகஸ்தீஸ்வரருக்கு பிரசன்னாபிஷேகம் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி, மிருத் சங்க்ரணம், அங்குரார்பணம், ரட்சாபந்தனம் நடந்தது. இரவு 10 மணிக்கு மேல் விமான பாலாலயம் முதற்கால யாக சாலை பூஜையை தொடந்து தீபாராதனை நடந்தது.

நேற்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, 9 மணிக்கு யாத்ராதானம், விமான பாலாலய அபிஷேகத்திற்கு உள் பிரகாரத்தில் கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து பாலாலய அபிஷேகம் தீபாராதனை நடந்தது.

நிகழ்ச்சியில் நெல்லை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர், அம்பை தெற்கு ஆய்வாளர் சீதாலெட்சுமி, அறங்காவலர்கள் சங்கு சபாபதி, ராஜகோபாலன், செயலர் ராமசாமி, முத்துகிருஷ்ணன், ராஜாமணி, பிரபு  உள்ளிட்ட பட்டர்கள், கோயில் நிர்வாகிகள், இளைஞரணியினர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: