×

சுரண்டையில் மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு நிதி உதவி

சுரண்டை, நவ.12:  சுரண்டையில் மின்சாரம் தாக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு நாடார் சங்கங்கள் சார்பில் நிதிஉதவி வழங்கப்பட்டது. மேலும் மின்சாரம் தாக்கி பலியான சரவணன் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி காமராஜர் பிறந்த நாள் விழாவிற்காக கட் அவுட் வைத்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சரவணன் (30) மற்றும் மணிகண்டன் (25) ஆகியோர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதில் சரவணனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மின்சாரம்தாக்கி பலியானார்கள் குடும்பத்திற்கு நாடார் மஹாஜன சங்கம் மற்றும் நாடார் அமைப்புகள் சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணநிதி வழங்கப்பட்டது. நிதியை சமத்துவ மக்கள் கட்சி முதன்மை பொது செயலாளரும் தொழிலதிபருமான எஸ்.வி.கணேசன் மற்றும் நாடார் மகாஜன சங்க துணை தலைவர் மதன் சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் வரகுணராமபுரம் நாட்டாண்மை செல்லத்துரை, ஊர் கமிட்டி உறுப்பினர்கள் மாணிக்கம், சமுத்திரம், நாடார் வாலிபர் சங்க துணை தலைவர் ராமர், ச.ம.க. வடக்கு ஒன்றிய செயலாளர் பாலன், அண்ணாமலை கனி, சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், வட்டார துணைத் தலைவர் தெய்வேந்திரன், நாடார் எழுச்சி பேரவை தலைவர் வழக்கறிஞர் சின்னத்தம்பி, காமராஜ் நகர் திமுக செயலாளர் சங்கரேஸ்வரன், லட்சுமணன், ஆறுமுகசாமி, சுப்பிரமணியன், வேல்ராஜ், குத்தாலிங்கம், கோபால், கண்ணன், சிற்றரசு, முருகன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வரின் நிவாரண நிதி மற்றும் சரவணனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என நாடார் சங்கங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : victim ,
× RELATED நீச்சல் பயிற்சியாளர்களுக்கு உதவி