×

வீரசிகாமணி விவேகானந்தா பள்ளி மாணவி தமிழக எறிபந்து அணிக்கு தேர்வு

சுரண்டை, நவ.12: வீரசிகாமணி விவேகானந்தா வெள்ளிவிழா மெட்ரிக் பள்ளி மாணவி தமிழக எறிபந்து அணிக்கு தேர்வாகியுள்ளார். டெல்லியில் நடைபெறும் எறிபந்து போட்டியில் தமிழகம் சார்பில் பங்குபெறும் வீராங்கனைகளுக்கான தேர்வு ஈரோடு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் வீரசிகாமணி விவேகானந்தா வெள்ளிவிழா மெட்ரிக் பள்ளி மாணவி துர்காதேவி முதலிடம் பெற்று சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறும் தேசிய போட்டிக்கான தமிழக அணியில் இடம் பெற்றார்.  தமிழக அணிக்கு தேர்வான மாணவி துர்காதேவியை பள்ளி முதல்வர் கல்யாணி சுந்தரம், துணை முதல்வர் கோமா செல்லம், நிர்வாகி பெலின்ஸ், உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், சரவணகுமார், ஜெபராஜ், பாலா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.

இதேபோல் கேரள மாநிலம் ஆலப்புழா அருகில் மரபள்ளியில் உள்ள நெஸ் கல்லூரியில் நடைபெற்ற இளையோருக்கான எறிபந்து போட்டியில் தமிழக அணி இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றது. தமிழக அணியின் வெற்றிக்கு காரணமான வீரசிகாமணி  விவேகானந்தா வெள்ளி விழா மெட்ரிக் பள்ளி மாணவர் விக்ரமை கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினார்.

Tags : student ,Weerasikkamani Vivekananda School ,ball team ,Tamilnadu ,
× RELATED முகநூலில் மாணவி படம் வெளியிட்டு அவதூறு வாலிபர் கைது