×

மெர்க்கன்டைல் வங்கி நிறுவனர் தினவிழா

நெல்லை, நவ. 12: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின்  98வது ஆண்டு துவக்க விழா, வங்கியின் நிறுவனர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.  டிஎம்பி நெல்லை மண்டல  அலுவலகத்தில் நேற்று காலை 11மணிக்கு நடந்த விழாவுக்கு வங்கியின் உதவி பொது மேலாளர் மார்ட்டின் செழியன் தலைமை வகித்தார். டிஎம்பி நெல்லை மண்டல முதன்மை மேலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். விழாவில் குத்து விளக்கு ஏற்றி உதவி பொதுமேலாளர் மார்ட்டின் செழியன் பேசுகையில், ‘வங்கி விரைவில் 100வது ஆண்டினை அடியெடுத்து வைக்க உள்ளது. வங்கி விரைவில் ரூ. 1 லட்சம் கோடி வர்த்தகம், ரூ. ஆயிரம் கோடி லாபம் கொண்டு வர வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். மேலும் டிஎம்பி முன்னேற்றம் காணவும், நெல்லை மண்டல அலுவலகம் சிறப்பாக பணிபுரிந்து வங்கி தலைவர், நிர்வாக இயக்குனர்கள், வங்கியின் இயக்குனர்கள், வங்கியின் உயர் அதிகாரிகள் கனவு நனவாக அனைத்து ஊழியர்களும் சிறப்பாக பணி செய்ய வேண்டும் என மண்டல மேலாளர் கௌதமன்  பேசினார். நெல்லை மண்டல சட்ட அதிகாரி மார்ஷல் நன்றி கூறினார்.

Tags : Founder ,Mercantile Bank ,
× RELATED அதிகாரி தேர்வில் இடஒதுக்கீடு...