வைகுண்டம் அணையில் இருந்து சடையனேரி கால்வாய்க்கு தண்ணீர்

சாத்தான்குளம், நவ. 12:  திருச்செந்தூர்  தென்

பகுதி விவசாயிகள் சங்கக் கூட்டம் சாத்தான்குளம் அடுத்த நரையன்குடியிருப்பில் செயல்படும் தலைமை அலுவலகத்தில் நடந்தது. சங்கத்தலைவர் சத்தியசீலன்  தலைமை வகித்தார். கிருஷண்ன வரவேற்றார்.  கூட்டத்தில் சாத்தான்குளம் தாலுகா புத்தன்தருவை வட்டார குளங்களுக்கும்,  உடன்குடி பகுதி சடையனேரி வட்டார குளங்களுக்கும் தண்ணீர் கேட்டு சங்கம் தொடர்ந்து  வலியுறுத்தி வருகிறது. தற்போது  வடகிழக்கு பருவமழை மூலம் பெய்த தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தை, வைகுண்டம் வடகால் வழியாக அதன் வழித்தட குளங்களை  நிரப்பிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீதமுள்ள தண்ணீரை கடலுக்கு வீணாகத்  திருப்பிவிட்டுள்ளனர். இதன் மூலம் சடையனேரி கால்வாய் மூலம் புத்தன்தருவை  குளத்துக்கு தண்ணீர் விடவில்லை. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். எனவே, இதுவிஷயத்தில் கலெக்டர், ஆர்டிஓ போர்க்கால நடவடிக்கை எடுத்து வைகுண்டம் அணையில் இருந்து வீணாக செல்லும் தண்ணீரை சடையனேரி  கால்வாயில் திருப்பிவிட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் உண்ணாவிரதப்  போராட்டம் நடத்துவது. பாபநாசம், சேர்வலாறு அணையில் இருந்தும்  தண்ணீர் திறந்து புத்தன்தருவை குளத்தை நிரப்ப வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில்  விவசாயிகள் நெல்சன், செந்தில்குமார்,ஞானமுத்து,  பால்சாமி, சரவணன், சரவணப்பாண்டி, ஸ்டீபன்ராஜ், செல்வராஜ், அடையல்  சத்தியசீலன், சேகர், கனகராஜ், தேவதாசன் பிரபாகர், சந்தோஷ் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர். பட்டுதங்கத்துரை நன்றி கூறினார்.

Related Stories: