×

உள்ளாட்சி தேர்தல் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி, நவ. 12: உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து தூத்துக்குடியில் நடந்த தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சண்முகநாதன் எம்.எல்.ஏ. பங்கேற்றார். உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.  தலைமை வகித்த மாவட்டச் செயலாளரான எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ. பேசுகையில், ‘‘ உள்ளாட்சி தேர்தலில்  அதிமுக சார்பில் போட்டியிட உரிமை கோருபவர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை வரும் 15, 16 தேதிகளில் உரிய கட்டணம் செலுத்திபெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என தலைமைக்கழகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். தூத்துக்குடி  மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிகளிலும் நாம் மகத்தான வெற்றிபெற நிர்வாகிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். இதற்கு முழு மூச்சாக நான் பணியாற்றுவேன். எனக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிடவேண்டும்’’ என்றார்.

கூட்டத்திற்கு பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், பொன்ராஜ், முருகன், சேவியர் முன்னிலை வகித்தனர். இதில் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாநில இணைச்செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆறுமுநயினார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், ஒன்றியச் செயலாளர்கள் திருச்செந்தூர் ராமச்சந்திரன், ஆழ்வை ராஜ்நாராயணன், வை ஆறுமுகநயினார், உடன்குடி மகாராஜன், சாத்தான்குளம் சவுந்தரப்பாண்டி,  மாவட்டச் செயலாளர்கள் இலக்கிய அணி நடராஜன், அண்ணா தொழிற்சங்கம் டேக்ராஜா, மீனவர் அணி டார்சன், மருத்துவர் அணி ராஜசேகர், தூத்துக்குடி பனை வெல்லம் கூட்டுறவு இணைய தலைவர் தாமோதரன், பேரூராட்சி செயலாளர்கள் காசிராஜன், மகேந்திரன், அரசகுரு, ராஜா மகாதேவன், செல்லத்துரை, கின்ங்சிலி ஸ்டார்லிங், துரைசாமி ராஜா, மாதவசிங், சிவலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் ஆயிஷா கல்லாசி, ஜான்ஸி, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச் செயலாளர் சத்யா லட்சுமணன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி  மாவட்ட இணைச் செயலளார் வீரபாகு, வக்கீல் பிரிவு மாவட்டத் தலைவர் செல்வக்குமார், அரசு வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதி மணிகண்டன், அண்ணா தொழிற்சங்க மாவட்டத் தலைவர் சந்திரராஜ்,

அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல பொருளாளர் வேல்பாண்டி, மகளிர் அணி செரினா பாக்கியராஜ், மாநகர மேற்கு பகுதி அவைத்தலைவர் சந்தனம், இளைஞர், இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளர் காசிராஜன், பொருளாளர் தனராஜ், ஆறுமுகநேரி ரவிச்சந்திரன், பூந்தோட்டம் மனோகரன், காயல் மவுலான, சிலுவை ரஜீத், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் கல்வி குமார், தொப்பைகணபதி, பொன்னம்பலம், லட்சுமணன், மின்சார பிரிவு ஜவகர், முன்னாள் கவுன்சிலர்கள் சுடலைமணி, முபாரக்ஜான்,  தமிழரசி, சந்தனப்பட்டு மற்றும் வட்ட செயலாளர்கள், முன்னாள் நகர்மன்றத் தலைவர் மனோஜ்குமார், முன்னாள் ஒன்றிய சேர்மன்கள் சுரேஷ்குமார், ஆழ்வார்திருநகரி விஜயகுமார், பிரபாகர், வெயிலுமுத்து, ஞானபுஷ்பம், மாவட்டப் பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள் சரவணவேல்,குலசை சங்கர், தோழப்பன்பண்ணை சுப்பையா, கே.டி.சி.ஆறுமுகம், கேஏபி ராதா, தங்கசெல்வம் வெங்கடேஷ் சுந்தரேஸ்வரன் பரிபூரணராஜா, மகளிர் அணி சண்முகத்தாய், வசந்தா, இந்திரா, ஷாலினி, ஸ்மைலா, ஜெகதிஸ்வரன், அண்டோ, ரமேஷ், விஜய்,  பில்லா விக்னேஷ், பாலஜெயம், சகாயராஜா, சாம்ராஜ், சரவணபெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Advisory Meeting ,AIADMK ,Tuticorin Southern District ,
× RELATED கறம்பக்குடி வட்டார வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம்