புன்னக்காயல் மாலுமி குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்

தூத்துக்குடி, நவ. 12:  தூத்துக்குடி  அடுத்த புன்னக்காயல் கப்பல் மாலுமிகள் சங்கத்தலைவர் சகாயராஜ் தலைமையில்  புன்னக்காயலை சேர்ந்த மாலுமி அந்தோணிசாமி குடும்பத்தினர் கலெக்டரிடம்  மனு அளித்தனர். மனு விவரம்:

 எங்கள் மகன் மாலுமி அந்தோணிசாமி கிப்சன் ( 22)  மும்பையிலுள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் மாலுமியாக பணியாற்றி வந்தார்.  கடந்த மே மாதம் 14ம் தேதி கிப்சன் பணியாற்றி வந்த கப்பல் துபாய் நாட்டிற்கு  சரக்கு ஏற்றி சென்ற போது கப்பலை நிலைநிறுத்தும் தொட்டிக்குள் இறங்கிய  கிப்சன் நிலைதடுமாறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை  சிகிச்சைக்கு தாமதமாக கொண்டுசென்ற நிலையில் உயிரிழந்தார். இதையடுத்து  இந்திய தூதரகம் மூலமாக அங்கிருந்து கொண்டுவரப்பட்ட அவரது உடல், அடக்கம்  செய்யப்பட்டது.

 கப்பலில் மாலுமியாக பணியாற்றிய  நேரத்தில் விபத்தில் இறந்த எனது மகன் கிப்சனுக்கு இறப்பு சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உயிரிழப்பிற்கு காரணம் குறித்த விசாரணை அறிக்கை மற்றும்  இழப்பீட்டுத்தொகை மும்பையிலுள்ள கப்பல் நிறுவனத்தால் இதுவரை  வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அந்த கப்பல் நிறுவனத்திடம்  நாங்கள் பலமுறை முறையிட்டும் பலனில்லை. எனவே, மிகவும் ஏழ்மை  நிலையில் வாழ்ந்துவரும் எனது குடும்பத்தை பாதுகாக்க ட்ட தனியார் கப்பல் நிறுவனத்திடம் இருந்து எனது மகன் கிப்சன்  உயிரிழப்பு நடந்ததற்கான காரணம் குறித்த அறிக்கை மற்றும் இழப்பீட்டுத்  தொகை பெற்றுத்தரவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: