×

ஜலகண்டாபுரம் அருகே பனங்காட்டூரில் அடிப்படை வசதி கோரி நூதன ஆர்ப்பாட்டம்

ஜலகண்டாபுரம், நவ.12: ஜலகண்டாபுரம் அருகே சூரப்பள்ளி கிராமம், பனங்காட்டூர் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜலகண்டாபுரம் அருகே சூரப்பள்ளி கிராமம், பனங்காட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சாக்கடை வசதி, சீரான குடிநீர் வினியோகம் இன்றி மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், பனங்காட்டூர் பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை, அங்கன்வாடி பள்ளி அருகே சிறுவர் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், நங்கவள்ளி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சூரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் முன் தலையில் இருமுடி கட்டியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு கிளை செயலாளர்கள் விஜயகலா, ஜெகதீஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர். பாப்பா, சீனிவாசன் முன்னிலை வகித்தனர். நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட குழு உறுப்பினர் ராஜாத்தி ஆகியோர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வெங்கடேசன், வெங்கடேஷ், கிருஷ்ணவேணி, ராஜகோபால், அன்பழகன், கவிதா, உமா, லட்சுமி, குப்புசாமி, தனபால், சரஸ்வதி, சாருமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : demonstration ,facilities ,Panangatur ,Jalakandapuram ,
× RELATED நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்