×

நாமக்கல், திருச்செங்கேட்டில் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல், நவ.12: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், நாளை (13ம்தேதி) மாலை 5 மணிக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் உடையவர் தலைமை வகிக்கிறார். இதில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. எனவே, மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அளவிளான சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளரர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு காந்திசெல்வன் தெரிவித்துள்ளார். திருச்செங்கோடு: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்,  நாளை (13ம் தேதி) காலை 10  மணிக்கு  திருச்செங்கோட்டில் அவைத்தலைவர் நடனசபாபதி தலைமையில் நடக்கிறது.  இதில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள்   குறித்து  ஆலோசனை நடைபெறும். எனவே, மாவட்ட நிர்வாகிகள்,  தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய. பேரூர்  செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி  அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்  தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.  மூர்த்தி எம்எல்ஏ கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : East ,West District DMK Working Committee Meeting ,Tiruchengate ,Namakkal ,
× RELATED கிழக்கு கடற்கரை சாலையோரம்: கண்மாய்...