×

திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது

பரமத்திவேலூர், நவ.12: திருமணிமுத்தாற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியில் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆட்டையாம்பட்டி, மதியம்பட்டி, எலச்சிபாளையம், மாணிக்கம்பாளையம், ராமதேவம், கூடச்சேரி, பில்லூர்  உள்ளிட்ட பகுதிகளில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகள் மற்றும் சிறுகுளங்கள் நிரம்பியுள்ளது. தொடர்ந்து பரமத்தி அருகே உள்ள இடும்பன் குளத்திற்கு தண்ணீர் வந்தடைந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இடும்பன் குளம் நிரம்பியதை அடுத்து, திருமணிமுத்தாற்றில் வெள்ள நீர், காவிரி ஆற்றை நோக்கி பாய்ந்தோடியது. இதனால், நன்செய் இடையாறு பகுதியில், திருமணிமுத்தாற்றின் கரையோரத்தில் உள்ள விவசாய நிலங்களில் பயிர் செய்துள்ள கோரைப்புல், வாழை, தென்னந்தோப்புகளில் வெள்ளநீர் புகுந்து சூழ்ந்துள்ளது. இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள கோரை புற்களை, அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் தண்ணீர் வடியாமல் இருந்தால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags : Flooding ,Thirumani Mutt ,
× RELATED ஆரணியாற்றில் வெள்ளம் காரணமாக புதிய தடுப்பணை உடைந்தது