×

சூளகிரி அருகே 2 டன் ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது

சூளகிரி, நவ.12: சூளகிரி அருகே 2 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போவை பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வழியாக, கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பேரிகை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், நேற்று காலை சூளகிரி-கும்பளம் சாலையில், பேரிகை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி டெம்போவை தடுத்து நிறுத்தி, சோதனை மேற்கொண்டனர். அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்ததும், அதை கர்நாடகாவிற்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, டெம்போ டிரைவரான சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த பிரகாஷ்(65) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், 2 டன் ரேஷன் அரிசியுடன் டெம்போவை பறிமுதல் செய்தனர்.

Tags : Sulagiri ,
× RELATED கஞ்சா விற்ற டிரைவர் கைது