×

திமுக எம்பி நன்றி தெரிவிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி, நவ.12: தர்மபுரி தொகுதி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார், பாப்பிரெட்டிப்பட்டி பகுதி வாக்காளர்களை ேநரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார், பாப்பிரெட்டிப்பட்டி அருகே தென்கரைக்கோட்டை பகுதி வாக்காளர்களை ேநரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இதில், கோபிசெட்டிபாளையம், பாப்பிசெட்டிப்பட்டி, துறிஞ்சப்பட்டி, ராமியணஹள்ளி, பெத்தூர் வடகரை, பாத்திமா நகர், திருவள்ளுவர் நகர் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று, வாக்காளர்களை சந்தித்து நன்றி கூறினார். அப்போது, மக்கள் ஆரத்தி எடுத்து அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார். இந்நிகழ்ச்சியில், யாகத்நாசர், மணி, வேடியப்பன், பாபு, சேகர் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். அரூர்: தர்மபுரி மாவட்ட திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார், அரூர் நகரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதையொட்டி, அரூர் திருவிக நகர், துப்புரவு பணியாளர் குடியிருப்பு, வர்ணதீர்த்தம், கடைவீதி, ஆத்தோரவீதி, உடையானூர், அம்பேத்கார் நகர், பாட்சாபேட்டை, மஜீத்தெரு, பரசுராமன் தெரு, கோவிந்தசாமி நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிக்கு சென்று நன்றி தெரிவித்தார். இதில், நகர செயலாளர் முல்லைசெழியன், ஒன்றிய செயலாளர் தேசிங்குராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,
× RELATED புதிய கல்வி கொள்கை என்ற பெயரால் வரும்...