முன்னாள் எம்எல்ஏ நினைவு நாள் அனுசரிப்பு

தர்மபுரி, நவ.12: தர்மபுரி முன்னாள் எம்எல்ஏ அரங்கநாதன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. தர்மபுரி முன்னாள் நகரமன்ற தலைவரும், முன்னாள் நகர அதிமுக செயலாளரும், தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், நெல் அரவை முகவர்கள் சங்க தலைவருமான வெற்றிவேலின் தந்தையும், தர்மபுரி தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட அதிமுக முன்னாள் துணை செயலாளருமான அரங்கநாதனின் 27ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, மதிகோண்பாளையம் எஸ்.ஆர்.ரைஸ் மில் வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு எஸ்.ஆர் மற்றும் எம்ஜிஆர் அறக்கட்டளை தலைவர் வெற்றிவேல் தலைமையில் ஏராளமானோர், அரங்கநாதன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  அறக்கட்டளை செயலாளர் மரகதம் வெற்றிவேல் குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முதியோருக்கு உதவித்தொகை ஆகியவற்றை வெற்றிவேல் வழங்கினார். பின்னர், நடந்த சிறப்பு இலவச மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் தொழிலதிபர் அண்ணாதுரை, கூட்டுறவு சங்க தலைவர் பூக்கடை ரவி, சக்திவேல், ஒன்றிய செயலாளர் பெரியண்ணன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னா நன்றி கூறினார்.

Tags :
× RELATED கடத்தூர் பகுதியில் சாலையோரம் கட்டி...