×

அரூர் அரசு மருத்துவமனையில் குடும்ப நலத்துறை இயக்குநர் ஆய்வு

தர்மபுரி, நவ.12: அரூர் அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநர் ஆய்வு செய்தார். தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு மருத்துவமனையில், தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 200 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய தாய், சேய் நல மையம் உள்ளது. இதேபோல், அவசர சிகிச்சைப் பிரிவு, டெங்கு நோய் தடுப்பு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அரூர் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து, நேற்று முன்தினம் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநர் ஹரிசுந்தரி, திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, டெங்கு நோய் தடுப்புக்கான மருத்துவ சிகிச்சைகள், மருத்துவர்களின் வருகை மற்றும் சிகிச்சைகள், உயிர்காக்கும் மருந்து, மாத்திரைகளின் இருப்பு, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்கான கூடுதல் தேவைகள் உள்ளிட்டவை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது, மருத்துவ அலுவலர் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Directorate of Family Welfare ,Aroor Government Hospital ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா