×

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, நவ.12:  தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் தர்மபுரி மாவட்டக்குழு சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாதையன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரதாபன் சிறப்புரையாற்றினார். இதில், 100 நாள் வேலை திட்ட அட்டை பெற்ற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். ஆண்டுக்கு 200 நாள் வேலை, சம்பளம் ₹500 ஆக உயர்த்த வேண்டும். வறட்சி நிவாரணமாக தென்னை மரத்திற்கு ₹25 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ₹50ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா, ஓய்வூதியம், 35 கிலோ அரிசி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் துணை தலைவர்கள் ராஜகோபால், முருகேசன், துணை செயலாளர்கள் பச்சாகவுண்டர், ராஜூ, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாதையன், கிருஷ்ணன், சாக்கன், சாரதா, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர், கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

Tags : Agricultural Workers' Union ,
× RELATED மத்திய அரசின் வேளாண் சட்டங்களை...