×

காங்கயம் சுற்று வட்டார கிராமங்களில் வேளாண்மை மானியத் திட்ட விளக்க வாகன பிரசாரம்

காங்கயம், நவ.12:தமிழ்நாடு அரசு சார்பில், விவசாயிகளின் வாழ்வாதரத்தை அதிகரிக்கும்  விதத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்ளை விவசாயிகளை விரைவாக  அறிந்துகொள்ளும் வகையில், காங்கயம் வட்டார வேளாண்மைத்துறையின் மூலம் தேசிய  உணவு பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் இனத்தில்  உயர் விளைச்சல் பெறுவதற்கான தொழில்நுட்பங்கள் குறித்த திட்ட  விளக்கப் வாகன பிரசாரம் நடைபெற்றது.இந்த பிரசார  வாகனம் காடையூர் கிராமத்திலிருந்து தொடங்கி, இல்லியம்புதூர், சிவன்மலை,  படியூர், கத்தாங்கண்ணி, கீரனூர், ஆலாம்பாடி வழியாக சென்று குட்டப்பாளையம்,  பழையகோட்டை, நத்தக்காடையூர், மருதுறை, பரஞ்சேர்வழி, நால்ரோடு  கிராமத்தில் வந்து பிரசாரம் நிறைவு பெற்றது.

இதன் மூலம், தேசிய உணவுப்  பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து மிக்க தானியங்களின்  முக்கியத்துவம், ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் மூலம் உயர் விளைச்சல்  பெறுவதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் மானிய விவரங்கள் குறித்த  விளக்கப்படங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் பிரதான் மந்திரி பயிர்  காப்பீட்டுத் திட்டம் குறித்தும், பிரதான் மந்திரியின் ஓய்வூதிய திட்டம்  பற்றிய விளக்கப்படங்களும் இடம் பெற்றிருந்தன. இத்திட்டங்களுக்கான  விளக்கத்தினை ஒலிப்பெருக்கி மூலமாகவும் வேளாண்மை உதவி அலுவலர்கள்  எடுத்துரைத்தனர்.இதில்துணை வேளாண்மை இயக்குநர்  வடிவேல், உதவி இயக்குனர் புனிதா, வேளாண்மை  அலுவலர் பானுப்பிரியா, துணை வேளாண்மை அலுவலர் அருள்மொழிவர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : circuit villages ,Kangayam ,
× RELATED ஆனைமலையாறு நல்லாறு திட்டம் நிறைவேற்ற...