×

கள்ளநோட்டு கொடுத்து வீட்டை விலைக்கு வாங்க முயன்ற அதிமுக பிரமுகர்

திருப்பூர்,நவ.12:  திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது காங்கயம் வட்டம் முத்தூர் அடுத்த பெருமாள் புதூர் பகுதியை சேர்ந்த விவசாயி சதீஷ்(40) என்பவர் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: எனக்குச் சொந்தமான வீட்டை சுமார் 26 மாதங்களுக்கு முன்பு  வெள்ளக்கோவில் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரிடம் 36 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு  விற்றேன். அதில்,  ரூ. 10 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்து விட்டு  கிரயம் பெற்று கொண்டார்.மீதி பணத்தை மூன்று மாதத்தில் தருவதாக கூறினார் .  அதை நம்பி நானும் கிரையம் செய்து கொடுத்தேன். மூன்று மாதம் கழித்து கள்ள  நோட்டை கொடுத்து ஏமாற்ற பார்த்தார். கள்ளநோட்டு என தெரிந்த நான் வாங்க  மறுத்தேன். அப்போது என்னை துப்பாக்கி காட்டி மிரட்டி எனது வீட்டில் இருந்த  வீட்டு உபயோகப் பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர். மேலும் நான்  முதல்வரின் வலதுகரம் என்றும் என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும்  மிரட்டுகிறார். மேலும் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகிறார்.  எனக்கு தாய், தந்தை யாரும் இல்லாததால் கேள்வி கேட்க ஆளில்லை என்பதை அறிந்து  மிரட்டுகிறார். எனக்கு சேர வேண்டிய பணம் மற்றும் வீட்டு உபயோகப்  பொருட்களை மீட்டு தரும்படி, எனது உயிருக்கு பாதுகாப்பு வழங்கும்படி  கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

Tags : house ,
× RELATED வீடு இருக்கு... பணம் பட்டுவாடா செய்த...