×

திருமலைராயன்பட்டினத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்

காரைக்கால், நவ. 12: காரைக்கால் திருமலை
ராயன்பட்டினம் போலகம் பல்நோக்கு கூடத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நாளை நடக்கிறது. இதுதொடர்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினம் போலகம் பல்நோக்கு கூடத்தில், நாளை (13ம் தேதி) மக்கள் குரல் எனும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில், அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள இருப்பதால், நிரவி - திருமலைராயன்பட்டினம் தொகுதிக்குட்பட்ட மக்கள் நேரில் வந்து தங்களது குறைகளை எழுத்துப்பூர்வமாக, உரிய ஆவணங்களுடன் தெரிவித்து குறைகளை தீர்த்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Camp ,Thirumalairayapattinam ,
× RELATED போலீஸ் குறை தீர்க்கும் முகாம்