இருளில் முழ்கிய அரசலாறு பாலம்

காரைக்கால் நவ. 12:  காரைக்காலின் பிரதான சாலையில் உள்ளது அரசலாறு பாலம். காரைக்காலில் இருந்து வெளியூர் செல்லும் வாகன ஓட்டிகள் இந்தப்பாலத்தை தான் பயன்படுத்தி வருகின்றனர். காரைக்கால் வழியாக நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி செல்லும் வாகன ஓட்டிகள் இந்தப்பாலத்தை கடந்து செல்ல வேண்டும். பாலத்தின் இருபுறமும் மின்கம்ப விளக்கு உள்ளது. பாலத்தின் அருகில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக இந்தப்பாலத்தில் ஒரு மின் விளக்கு கூட எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன  ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அவ்வப்போது விபத்தும் ஏற்பட்டு வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி அரசலாறு பாலத்தில் மின் விளக்குகள் எரிய மின்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை

வைத்துள்ளனர்.

Related Stories: