மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைக்க கோரி இ.கம்யூ. கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, நவ. 12:   மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைக்க கோரி இந்திய கம்யூ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.நாகை மாவட்டத்திற்கான மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறை பகுதியில் அமைக்க வேண்டும். மருத்துவக் கல்லூரிக்கு நீடூர் ஜமாத்தார் இடம் வழங்க தயாராக இப்பதால் இந்த பகுதியில் மருத்துவக் கல்லூரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்திய கம்யூ. கட்சி சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.நகர செயலாளர் மனோன்ராஜ் தலைமை வகித்தார். பிரதீப், சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு இடும்பையன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இமானுவேல், அன்புரோஸ், சேக்இஸ்மாயில், மணி உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Advertising
Advertising

Related Stories: