காரைக்கால் கடற்கரையில் தூய்மை பணி

காரைக்கால், நவ. 12: காரைக்கால் அக்கம்பேட்டை கடற்கரை பகுதியில் புதுச்சேரி அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம், காலநிலை மாற்றம் மற்றும் ஒருங்கிணைந்த கடலோர மேலாண்மை சங்கம் சார்பில் கடற்கரையில் தூய்மை பணி நேற்று நடந்தது. துணை ஆட்சியர் (வருவாய்) ஆதர்ஷ், துணை கலெக்டர் (பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன் ஆகியோர் தூய்மை பணிகளை தொடங்கி வைத்தனர். பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், சமுதாய நலப்பணித்திட்ட மாணவர்கள், காரை சிறகுகள் அமைப்பினர்,  தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர். அதேபோல் காரைக்கால் கடற்கரை பகுதியில் நடைபெற்ற தூய்மைப்படுத்தும் பணியில் நகராட்சி ஆணையர் சுபாஷ், என்எஸ்எஸ் அதிகாரி லட்சுமணபதி, என்எஸ்எஸ் மாணவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர். வரும் 17ம் தேதி வரை காரைக்காலில் உள்ள பல்வேறு கடற்கரை பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ள உள்ளனர்.

Related Stories:

>