போலி பத்திரம் தயாரித்த நில மோசடி ஆசாமி குறித்து தகவல் கொடுக்க போலீஸ் வேண்டுகோள்

புதுச்சேரி, நவ. 12: புதுவையில் போலி பத்திரம் தயாரித்த நில மோசடி ஆசாமி குறித்து தகவல் கொடுக்குமாறு லாஸ்பேட்டை போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புதுவை, வினோபா நகரைச் சேர்ந்தவர் உமாசுதன் (40). லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரான இவர் மீது ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை போலி பத்திரம் தயாரித்து விற்று மோசடி செய்ததாக லாஸ்பேட்டை போலீசில் சில மாதங்களுக்கு முன்பு வழக்குபதிவு செய்யப்பட்டது. போலி ஆவணம் தயாரித்தல், ேமாசடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவான நிலையில் உமாசுதன் தலைமறைவானார். சென்னை ஐகோர்ட்டில்  முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது வரை போலீஸ் பிடியில் சிக்காமல் உள்ள இந்த மோசடி நபரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனே லாஸ்பேட்டை காவல் நிலையத்தை 0413-2234097 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். இவ்வழக்கில் துணை தாசில்தார் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>