×

நிலவேம்பு கசாயம் வழங்கல்

வானூர், நவ. 12:  வானூர் தாலுகா தைலாபுரம் கிராமத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. பா.ம.க இளைஞரணி கிளியனூர் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் தைலாபுரம் கிராமத்தில் உள்ள பள்ளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இளைஞரணி செயலாளர் பாரதிராஜா தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் கருணாநிதி நிலவேம்பு குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது மாவட்ட இளைஞரணி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜி, துணைத்தலைவர் அரிசங்கர், ஒன்றிய தலைவர் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Tags :
× RELATED திருச்சி மாநகரில் இன்றும், நாளையும் குடிநீர் சப்ளை நிறுத்தம்