×

சங்கராபுரம் நீதிமன்றத்தில் குற்றவாளி சரண்

சங்கராபுரம், நவ. 12: வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரி கிராமத்தில் ரகு(57) என்பவர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் வினோத்(21) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான வினோத் என்பவர் சங்கராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். விசாரணை நடத்திய குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாஸ்கர் கொலை குற்றவாளியான வினோத்தை 15நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


Tags : Charan ,Sankarapuram ,court ,
× RELATED சென்னை எம்.கே.பி. நகரில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்றவர் சரண்