×

விழுப்புரம் நகராட்சி ஆணையர் பணியிடமாற்றம்

சென்னை, நவ. 12: தமிழகம் முழுவதும் 11 தேர்வு நிலை நகராட்சி ஆணையர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இது குறித்து நகராட்சி நிர்வாக கமிஷனர் அசோகன் வெளியிட்ட அறிக்கை: தேர்வு நிலை நகராட்சிகளான ஆத்தூர் ஆணையர் சரஸ்வதி உதகமண்டலத்திற்கும், திருவாரூர் ஆணையர் நவீந்திரன் திருவண்ணாமலைக்கும், தர்மபுரி ஆணையர் மகேஷ்வரி காஞ்சிபுரத்திற்கும், மயிலாடுதுறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி சிவகாசிக்கும், திருவேக்காடு ஆணையர் சித்ரா தர்மபுரிக்கும், நாமக்கல் ஆணையர் சுதா கரூர் நகராட்சிக்கும், மேட்டுப்பாளையம் ஆணையர் காந்திராஜ் பொள்ளாச்சிக்கும், விழுப்புரம் ஆணையர் லட்சுமி கும்பகோணத்திற்கும், உடுமலைபேட்டை ஆணையர் ராஜாராம் கோவில்பட்டிக்கும், பழனி ஆணையர் நாராயணன் கொடைக்கானலில் முருகேசனுக்கு மாற்றாகவும், திருப்பத்தூர் ஆணையர் சந்திரா கிருஷ்ணகிரிக்கும் ஆணையர்களாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அசோகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Villupuram Municipal Commissioner ,
× RELATED நிலத்தை எழுதி கொடுக்கும்படி மிரட்டல்...