×

தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர்கள் நீக்கம்

விழுப்புரம், நவ. 12:  பணித்தள பொறுப்பாளர்கள் திடீரென்று நீக்கப்பட்டதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் பணி வழங்கக்கோரி மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்தைச் சேர்ந்த தேசிய ஊரகவேலைத்திட்ட பணித்தள பொறுப்பாளர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் பணித்தளபொறுப்பாளர்கள் கடந்த 2011ம் ஆண்டு தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். ஆனால் தற்போது பணித்தள பொறுப்பாளர்கள் செய்யும் வேலையை எங்களுக்கு எந்தவித முன்அறிவிப்பும் இல்லாமல் அனைவரையும் நீக்கிவிட்டார்கள். எங்களுக்கு பதில் வறுமை ஒழிப்பு சங்கத்திலிருந்து வேறு ஒரு நபர்களை நியமித்து அவர்களுக்கு மாத ஊதியம் தருவதாக கூறப்படுகிறது. எனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவித்த பணித்தள பொறுப்பாளர்களாகிய நாங்கள் பஞ்சாயத்து வேலைகள் அனைத்தும் ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதுணையாக வேலை செய்து வந்தோம். எங்களை தொடர்ந்து வேலை செய்ய அனுமதி வழங்கியும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Removal ,
× RELATED போட்டி தள்ளிப்போனதால் ஒலிம்பிக் வளையங்கள் அகற்றம்